முரட்டு சிங்கிள்!.. முத்தமும் கொடுக்காத உத்தமர் சல்மான் கான்!.. ஆனால், அந்த நடிகைக்கு மட்டும்?

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் தனது படங்களில் உதட்டில் தரும் முத்த காட்சிகளை தவிர்த்து நடித்து வருகிறார். முத்த காட்சிகள் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்த சல்மான் கான் ஒரு நடிகையுடன் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகைகளுக்கு நோ முத்தம்:

சல்மான் கான் பீவி ஹோ தோ ஐசி படத்தில் முதல் முதலாக துணை நடிகராக நடித்திருந்தார். மேனே பியார் கியா படத்தின் மூலம் இந்தியில் கதாநாயகனாக அறிமுகமான சல்மான் கான் அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். அதை தொடர்ந்து சாஜன், ஹம் ஆப்கே ஹே கோன், பீவி நம்பர் 1 உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இந்திய ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றார். மேலும், குச் குச் ஹோதா ஹே படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

மேலும், சல்மான் கான் கடைசியாக பூஜா ஹெக்டேவுடன் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக ராஷ்மிகா மந்தனாவுடன் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ராஷ்மிகா கடந்த ஆண்டு சந்தீப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமேல் படத்தில் நடித்திருந்தார். அப்படம் 900 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ராஷ்மிகாவிற்கு புஷ்பா படத்திற்கு பிறகு அனிமல் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

மேலும், சல்மான் கான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தில் தான் ராஷ்மிகா மந்தனா சல்மான் கானிற்கு ஜோடியாக நடிப்பதாக தெரிவித்துள்ளனர். அடுத்த ரம்ஜானுக்கு படம் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

கரீஷ்மாவுக்கு மட்டும் கிஸ்:

ஐஸ்வர்யா ராய், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, கேத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல நடிகைகளுடன் தொடர்பான கிசுகிசுக்கள் வெளியாகி கொண்டிருந்த்தது. தான் நடிக்கும் படங்களில் முத்த காட்சிகளே வேண்டாம் என்று தவிர்த்து வரும் சல்மான் கான் 1996ல் வெளியான ‘Jeet’ என்ற படத்தில் தன் கொள்கையை கைவிட்டு கரிஷ்மா கபூருடன் ஒரு சில நொடிகள் முத்தக் காட்சியில் நடித்துள்ளார்.

இந்த காட்சியினை பற்றி இந்தி ரசிகர்கள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகிறார்கள். பல இயக்குநர்கள் படத்திற்காக முத்த காட்சியில் நடிக்க வற்புறுத்தினாலும் தன் உறுதியான முடிவில் இருந்து பின் வாங்காத சல்மான் கான் கரீஷ்மாவுடன் மட்டும் அப்படி நடித்தது ஏன் என்ற கேள்வி எழுந்து வருகிறது. சில விமர்சர்கள் அவர் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டிருப்பார் எனவும், சிலர் கரீஷ்மாவுக்காக விட்டு கொடுத்துள்ளார் எனவும்,சிலர் அது முத்தமே இல்லை சீட் ஷாட் செய்து எடுத்திருப்பார்கள் என பல விதத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews