கோயம்பேட்டில் குவிந்தது தக்காளி; 40 ரூபாய் குறைந்து விற்பனை! மக்கள் மகிழ்ச்சி!!

கோயம்பேடு

கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை தாறுமாறாக விலை உயர்ந்து காணப்பட்டது .ஏனென்றால் தக்காளி வரத்து குறைவு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தொடர்மழை இப்படி பல காரணங்களால் தக்காளி விலை அதிகமாக விற்கப்பட்டது.

தக்காளி

அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய தினம் வரை தக்காளி கிலோ 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இல்லத்தரசிகள் பலரும் தக்காளி வாங்குவதை கைவிட்டனர்.

இந்நிலையில் பலருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தக்காளி விலை குறைந்து காணப்பட்டுள்ளது. அதன்படி சென்னை நகரில் தக்காளி விலை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 100 முதல் ரூபாய் 110 வரை விற்கப்படுகிறது என்பது மக்களுக்கு பெருமகிழ்ச்சி உருவாக்கியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அங்கு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 40 ரூபாய் குறைந்துள்ளது.

மொத்த சந்தையில் 40 ரூபாய் குறைந்தது சில்லறை வியாபாரத்திலும் சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print