ஆட்டோவில் வந்திறங்கிய கூல் சுரேஷுக்கு அடித்த லக்.. இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய சேலம் RR தமிழ்செல்வன்..

தமிழ்சினிமாவில் தலை காட்டியதை விட சோஷியல் மீடியாக்கள் மூலமாகவே பிரபலமானவர்தான் கூல் சுரேஷ். எந்த பெரிய படங்கள் வந்தாலும், குறிப்பாக சிம்புவின் படங்கள் வரும்போது அவரின் முரட்டு ரசிகனாக முதல் ஆளாக வந்து படத்தைப் பார்த்து ரிவியூ கொடுப்பார் கூல் சுரேஷ். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் கூல் சுரேஷ் சமீப காலமாக சோஷியல் மீடியாக்களில் தன்னுடைய கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பொதுமக்களுக்கு உதவி செய்வது, பட புரோமோஷன் விழாக்களில் கலந்து கொள்வது போன்ற செய்கைகளைச் செய்து வருகிறார். சமீபத்தில் கன்னி பட விழாவின் போது படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு பெண்கள் போன்று அலங்கரித்து வந்தது சோஷியல் மீடியாவையே கலக்கியது.

இப்படி பிரபலமாகி இருக்கும் கூல் சுரேஷ் அண்மையில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி ஹோட்டல் நிறுவனர் தமிழ்செல்வனைச் சந்தித்திருக்கிறார். சந்திப்பு முடிந்தவுடன் தமிழ்ச்செல்வன் வழியனுப்பும் போது எதில்வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கூல் சுரேஷ் ஆட்டோவில்தான் வந்தேன் என்று கூற, ஏன் கார் என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.

அப்போது கூல் சுரேஷ் அவரிடம்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அங்கே இருந்ததால் மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சிக்கி கார் பழுதடைந்ததால் அதனை விற்று விட்டதாகக் கூறியிருக்கிறார். உடனே தமிழ்ச் செல்வன் ஒரு மூன்று நாளுக்குப் பிறகு வந்து என்னைப் பாருங்கள் என்று கூறியருக்கிறார்.

தம்பி இசையால் மெய்சிலிர்த்துப் போன அண்ணன்.. கங்கை அமரனுக்கு 30 பவுன் தங்கச் சங்கலியை பரிசாய் அணிவித்த இளையராஜா..

சொன்னது போலவே 3 நாட்கள் கழித்து கூல் சுரேஷ் வந்து பார்க்க அவருக்காக தமிழ்ச்செல்வன் தான் பயன்படுத்திக் கொண்டிருந்த காரை அவருக்கு பரிசாக அளித்திருக்கிறார். இதனைக் கண்டு நெகிழ்ந்து போன கூல்சுரேஷ் அவருக்கு நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

சேலம் ஆர்.ஆர்.பிரியாணி தமிழ்ச்செல்வன் தனது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக உயர்ரக கார்களை பணி நிமித்தம் சென்று வர வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதில்தான் அவரது ஊழியர்கள் சென்று வருவார்கள். மேலும் இயலாத பலருக்கும் உதவி செய்து வருகிறார். தனது பணியாளர்களின் இல்ல விழாக்களுக்குத் தேவையான பண உதவிகளையும், மேலும் பொருள் உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...