Connect with us

மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் எப்போது?… சேலத்தில் செம்ம கெத்தாய் அறிவித்த உதயநிதி!

Udayanithi

செய்திகள்

மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் எப்போது?… சேலத்தில் செம்ம கெத்தாய் அறிவித்த உதயநிதி!

மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் எப்போது?… சேலத்தில் செம்ம கெத்தாய் அறிவித்த உதயநிதி!

குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டம் முதலமைச்சர் வாக்கு கொடுத்த படி நிறைவேற்றப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று ஆத்தூர், தாதகாப்பட்டி, கோட்டை மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய உதயநிதி, முதலமைச்சர் 2 நாட்களுக்கு முன்பு கூட தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் என உறுதியளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top