எலி பேஸ்ட் உற்பத்தி, விற்பனைக்கு தடை – மா.சுப்பிரமணியன்!!

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் தற்கொலை சம்பவங்கள் என்பது தொடர்கதையாகி வருகிறது. இவற்றை தடுக்கும் வகையில் பூச்சி மருந்து, எலி மருந்துகள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் 3% மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள எலிமருந்து பேஸ்ட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

சென்னையை உலுக்கிய பரங்கிமலை வழக்கு: குண்டர் சட்டம் உறுதியானது!!

அதே போல் சட்ட விரோதமாக ஆன்லைனில் விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமனியன் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே தற்கொலைகளைத் தடுக்கும் விதத்தில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடியை கொல்லுங்கள்! காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் கைது!!

மேலும், தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையால் தற்கொலைகள் குறைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.