கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!!

நம் தமிழகத்தை பொறுத்த வரையில் மது பிரியர்களிடம் கூடுதலாக மது விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து புகார் எழுந்தது. குறிப்பாக ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதம் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மதுகடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு மதுரை, அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மது கடைகள் விரிவான பதில் அளிக்கவில்லை என்ற தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த மதுபாட்டில்கள் விற்பனையாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன் படி, தமிழகத்தில் 852 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ 4.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய நடவடிக்கையால் வரும் காலங்களில் கூடுதலாக மது விற்பனை செய்யப்படுவது தடுக்க முடியும் என மதுபிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.