News
“மன்சுகொண்ட நவாப்” நிறுவன பெயரில் “போலி அரிசி” விற்பனை!!
தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக போலிகளின் வரத்து காணப்படுகிறது. மேலும் முன்னதாக பணம் அச்சிடுதல் போலி காணப்பட்டது. அதன் வரிசையாக தற்போது போலி சான்றிதழ், போலி மருத்துவம் இப்படி போலிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதன் வரிசையில் தற்போது உணவுப் பொருட்களிலும் பல்வேறு போலி காணப்படுகிறது.
இது குறித்தும் தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்தின் திருச்சியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி அரிசி விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டது. மேலும் திருச்சியில் அரிசி கடைகள் மற்றும் கிடங்குகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் இதில் கர்நாடகாவின் புகழ்பெற்ற மன்சுகொண்ட நவாப் நிறுவனம் பெயரில் போலி அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார்.
புகாரை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மார்க்கெட் பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் 50 ஆயிரம் கிலோ வரை மன்சுகொண்ட நவாப் அரிசி பறிமுதல் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.தற்போது உணவுப் பொருட்களிலும் இந்த போலிகளின் கலப்படம் அதிகமாக காணப்படுவதால் மக்கள் மிகவும் ஜாக்கிரதையோடு உணவுகளை உண்ணவேண்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
