கஞ்சா விற்பனையால் வந்த வினை; கிராமத்து பெண்கள் கூட்டமாக கதறல்!

கச்சிராயபாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தங்களது பகுதியில் சாராயம், கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது கோரிக்கை மனுவையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியுள்ளனர்.

அதில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்படுவதாகவும், நாளடைவில் அவர்கள் அப்பழக்கத்திற்கு அடிமையாவதால் பொது மக்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தங்களது பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டுமென வடக்கனந்தல் பேரூராட்சி 9வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment