Connect with us

வாரிசு பட போஸ்டர் டிசைனருக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? ஏமாற்றத்தில் புலம்பும் படக்குழு!

vijay 3 look

பொழுதுபோக்கு

வாரிசு பட போஸ்டர் டிசைனருக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? ஏமாற்றத்தில் புலம்பும் படக்குழு!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியானது . படத்திற்கு தமிழில் வாரிசு என்று தலைப்பு வைத்து ஃபஸ்ட் லுக் போஸ்டரில் கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கும் படி படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஃபஸ்ட் லுக் போஸ்டறில் விஜய்க்கு பின்னால் இருக்கும் கிராபிக்ஸ் கூகுலிலிருந்து எடுக்கப்பட்டது என தெரியவந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் இந்த போஸ்டரை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

unnamed 8

அதை தொடர்ந்து விஜய் பிறந்தநாள் அன்றே இரண்டாவது மற்றும் மூன்றாவது லுக் போஸ்டரை ஷேர் செய்துள்ளது.இதில் விஜய் அவர்கள் மாட்டுவண்டியில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளது.

அதை பார்ப்பதற்கு சந்திரமுகி படத்தில் ரஜினி எண்டரி வரும்போது உள்ளதாகவும் விஜய் அவர்கள் அடுத்த ரஜினியாக வருவதற்கு அவரைப்போல ஃபஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிடுவதாகவும் கிசுகிசுத்து வந்தனர்.

unnamed 7

இதற்கிடையில் இந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரை ரஜனி கோபி பிரசன்னா உள்ளிட்டோர் தான் வடிவமைத்துள்ளார் இவர் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில், பீஸ்ட், மாஸ்டர், மெர்சல், போன்ற பல்வேறு திரைப்படங்களில் போஸ்டர்களை உருவாக்கியவர் தான்.

இந்த போஸ்டர்களை டிசைன் செய்வதற்காக மட்டுமே தயாரிப்பு நிறுவனம் 14 லட்சம் சம்பளமாக கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது . ஆனால் ரசிகர்கள் மத்தியில் திருப்தி வராத பட்சத்தில் பிரயோஜனம் கிடையாது என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

மாமனிதன் திரைப்படம் – 3 நாளில் வசூல் தெரியுமா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top