
பொழுதுபோக்கு
புஷ்பா 2 படத்திற்கு அல்லு அர்ஜுன் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .நடிகை ராஷ்மிகா கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தரமாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் 17 டிசம்பர் 2021 தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. புஷ்பா முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி அந்த வகையில் 50 நாட்களில் உலகளவில் 365 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை புஷ்பா படம் படைத்தது.
இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இருவருக்கிடையிலான மோதல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதியிடம் இப்படத்தில் நடிப்பதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.சுகுமார் தயாரித்த தெலுங்குப் படமான ‘உப்பெனா’ படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி தற்போழுது 4க்கு மேற்பட்ட ஹிந்தி படத்திலும் நடித்துவருகிறார்.
இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு முக்கிய போலீஸ் உயர் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்களாம். விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க சம்மதித்தால் ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு அவர் மீண்டும் பகத் பாசிலுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிப்பார்.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் மட்டுமல்ல, புஷ்பா இயக்குனர் சுகுமாரும் தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனின் சம்பளம் சுமார் 85 கோடிகள் வரை இருக்கலாம் என தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.
