Entertainment
சாக்ஷி – கவின் காதல் ப்ரேக் அப்!!
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரம் முடியப்போகிறது. அதற்குள் புறணி பேசுதல், சண்டை, டார்க்கெட் செய்தல் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது பிக் பாஸ்.
மூன்று நாட்கள் முன்பு ஒளிபரப்பான எபிஸோடில் சாக்ஷி தனக்கு கவின் மீது கிரஷ் இருப்பதாக ஷெரினிடம் கூறினார். பின்னர் அந்த க்ரெஷ் பிக் பாஸ் வீட்டில் காதலாக மாறி உள்ளது. ஆமாங்க, ப்ரோமோவில் சாக்ஷி கவினிடம் காதலைப் பற்றி ஏதோ பேசுகிறார், அதனை ஆமோதிக்கும்விதமாக கவின் பதிலளிக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களும் இருவரும் ஒன்றாகவே சுற்றுகிறார்கள், முகென் கூட கவினைக் கடுப்பேற்ற சாக்ஷிக்கு பொட்டு வைத்துவிடுவார், ஆனால் அதை கவின் கண்டுகொள்ளவில்லை. மாறாக சாக்ஷிக்கு பொட்டு அழகாக உள்ளதாகவே கூறியிருப்பார்.
அதன் பிறகு கவினும் சாக்ஷியும் ஒன்றாக இருந்தார்கள் அனைத்து இடங்களிலும், ஆனால் நேற்று கமல் ஹாசன் காலட் ஆஃப் த வீக் என்ற புதிய முறையில் மக்களில் ஒருவர் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் பேசுவார் என்று அறிவித்தார்.
அப்போது கிருத்திகா என்ற பெண் கவினிடம் பேச விரும்பினார், கவின் நீங்கள் யாரை இந்த வீட்டில் உண்மையாகக் காதலிக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு யாரையும் காதலிக்கவில்லை என்று பதிலளித்தார். சிறிது நேரத்திலேயே சாக்ஷியின் முகம் மாறியது.
இன்றைய ப்ரோமோவிலும் அதே போல் தான் காட்டப்படுகிறது. கவின் ஒரு வழியாக சாக்ஷியையும் கழட்டி விட்டுவிட்டார் போல…
