Entertainment
கவினால் மனமுடைந்த சாக்ஷி!!!!!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களாக மீரா மிதூன், தர்ஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோல டாஸ்கின் அனைத்து செயல்பாடுகளையும் சிறப்பாக செய்ததாக முகின் தேர்வானார். அதை தொடர்ந்து டாஸ்கில் சரியாக பங்கெடுத்தாவர்களாக அபிராமி மற்றும் லோஸ்லியா தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் போட்டியில் முறையாக பங்கெடுக்காதவர்களை தேர்வு செய்யும் போது மீரா மிதூன் பிரச்சினை ஏற்படுத்தினார்.

தன்னை பொறுத்த வரைக்கும் டாஸ்கில் சரியாக பங்கெடுக்கவில்லை என சாக்ஷி மற்றும் ஷெரீன் பெயரை கூறினார். அதுவரை அமைதியாக இருந்த பிக்பாஸ் வீட்டில் புயல் வீச தொடங்கியது.
கிராமம் டாஸ்கில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் அவர்கள் இருவரும் சரியாக செய்யவில்லை என அதற்கு மீரா காரணம் கூறினார். கவினும் இதை ஆமோதிக்கும் வகையில் கூறினார். இதற்கு அவர்கள் இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து மது, தன்னைவிட மீரா டாஸ்க்கை சிறப்பாக செய்துவிட்டாரா என்று ஒரு கேள்வி எழுப்பினார்.
தான் சரியாக டாஸ்க்கை செய்யவில்லை என்று சொன்ன கவினிடம் சண்டைக்கு போனார் சாக்ஷி. அதில் இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் எழுந்தது. இதனால் மனமுடைந்த சாக்ஷி, வட இந்தியர்கள், தென்னிந்தியர்களுக்கு இடையில் நீ பெரியவனா, நான் பெயரியவனா என்று கேட்பது போல இந்த டாஸ்க் உள்ளது.
பிரிவினையை தூண்டும் விதத்தில் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உருவாகும் வாதத்தில் ஹவுஸ்மேட்ஸ் கலாச்சார வேற்றுமை, பேதமையுடன் நடந்து கொள்கின்றனர் என்று சாக்ஷியும் ஷெரினும் கூறி வருகின்றனர்.
