Entertainment
மீண்டும் ஆரம்பமான சாக்ஷி, கவின் ரொமன்ஸ்..!!
கடந்த வாரம் சாக்ஷி, கவின் மற்றும் லோஸ்லியா தொடர்பான விவாகரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தின. முடிவில் கமல்ஹாசனிடம் இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டது.
சாக்ஷி, கவின் மற்றும் லோஸ்லியாவிடம் விசாரித்த கமல், கவின் செய்தது தவறு என்று கூறினார். இருவரிடமும் அவர் நெருக்கமாகப் பழகியது தவறு என்றும், சாக்ஷியை ஏன் அழவைக்கிறீர்கள்? என்றும் கேள்விகள் கேட்டார். தன் தவறை உணர்ந்த கவின் மன்னிப்பு கோரினார்.

நேற்றைய நிகழ்ச்சியில் கவினிடம் தனிப்பட்ட முறையில் பேசிய லோஸ்லியா, கவினைப் பற்றி நடிக்கிறாய் என்று தான் பேசியதற்கு அவரிடம் மன்னிப்பு கோரினார். கவினும் அந்த நிகழ்வுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
பிறகு நடந்த ‘பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா’ டாஸ்க்கில், முந்தைய வாரம் நடைபெற்ற விவாகரங்களை கவின் பாடலாக படிப்பது போன்ற சீட்டு வழங்கப்பட்டது. அதை கவின் படித்த போது பிக்பாஸ் வீட்டில் கலகலத்தது.
நேற்று சாக்ஷி கருப்பு நிறத்திலான ஆடையை அணிந்திருக்கும் நிலையில், கவினும் கருப்பு நிற ஆடையை அணிகிறார். அதை பார்க்கும் ரேஷ்மா, ஷெரீன், லோஸ்லியோ போன்றோ அவர்கள் இருவரையும் கிண்டல் செய்தனர். இதனால் அவர்களுக்கிடையே ரொமான்ஸ் கூடியது.
