Entertainment
சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடிக்கும் பட டைட்டில் அறிவிப்பு!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்லாவிட்டாலும் ஏற்கனவே பிக்பாஸ் டைட்டில் வென்ற மூன்று பேர்களை விட அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் சாக்ஷி அகர்வால் என்பது குறிப்பிடதக்கது
ஏற்கனவே ஐந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் தற்போது மேலும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பதும் அந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’தி நைட்’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விது என்பவர் நாயகனாக நடிக்க உள்ளார். ரங்கா புவனேஸ்வர் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு அன்வர்கான் தாரிக் என்பவர் இசையமைக்க உள்ளார். ரமேஷ் ஒளிப்பதிவில் ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
குட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட படம் என்றும் சாக்ஷி அகர்வால் கேரக்டருக்கு இந்த படத்தின் கதையில் அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும் இந்த படம் தமிழ் திரையுலகில் சாக்ஷி அகர்வாலுக்கு இது ஒரு மிகப்பெரிய திருப்பத்தை தரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Happy To Share You The Title Look Of My Next Flick #TheNight ! #GoodHopePictures
Male Lead @itsmevidhu
Directed by #Rbhuvanesh @anwarmusics
Editor @ziansrikanth
camera #Ramesh
producers #GK, #KalasaSelvam PRO @johnmediamanagr pic.twitter.com/2lLGFyPGsF— Sakshi Agarwal (@ssakshiagarwal) January 3, 2021
