Connect with us

தந்தையின் ஆசையை நிறைவேற்றிய சாக்ஷி அகர்வால்… ஓ இவங்க தான் டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்ஸா?

sakshi agarwal 1

பொழுதுபோக்கு

தந்தையின் ஆசையை நிறைவேற்றிய சாக்ஷி அகர்வால்… ஓ இவங்க தான் டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்ஸா?

தந்தையின் ஆசையை நிறைவேற்றிய சாக்ஷி அகர்வால்… ஓ இவங்க தான் டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்ஸா?

கோலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். ஹீரோயினாக ஜொலிக்க முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு செகெண்ட் ஹீரோயின் மற்றும் சிறப்பு தோற்றங்களில் அவ்வபோது ஏதேனும் ஒரு படத்தில் தலைகாட்டி வருகிறார் சாக்ஷி அகர்வால். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சாக்ஷி அகர்வால் கைவசம்
நான் கடவுள் இல்லை, தி நைட் போன்ற படங்கள் உள்ளன. விரைவில் இந்த படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால் அடிக்கடி விதவிதமான போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் சமீபத்தில் சொகுசு கார் ஒன்றை புதிதாக வாங்கி உள்ளாராம். இதுகுறித்து பேசிய சாக்ஷி, “சொகுசு கார் வாங்குவது எனது தந்தையின் 22 ஆண்டு கால கனவாகும். இந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது. புதிய மெர்சிடிஸ் E வகுப்பு காரை வாங்கியுள்ளேன். இது என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம்” என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி என்னுடைய இந்த வெற்றி உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவியாக இருக்கும். என்னால் இந்த கனவை நினைவாக்க முடியுமென்றால் ஒவ்வொருவராலும் நிச்சயம் முடியும் என பிறருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக சாக்ஷி அகர்வால் பேசியுள்ளார்.

சமீபகாலமாக திரைபிரலங்கள் பலரும் சொகுசு கார் வாங்கி வந்த நிலையில் தற்போது நடிகை சாக்ஷியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். அதுவும் தனது தந்தையின் இத்தனை ஆண்டுகால ஆசையை நிறைவேற்றி டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ் என்பதை நிரூபித்து விட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top