
பொழுதுபோக்கு
விக்ரம் படத்தில் வந்த சக்கு சக்கு வத்திகுச்சி பாடல் – டான்ஸ் ஆடிய மன்சூர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது,இதைத்தொடர்ந்து இந்த படம் வெளியாகி 20நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக திறமையாக நடித்துள்ளார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள். லோகேஷ் மடத்தில் சண்டை காட்சிகளின் பின்னணியும் பாடல் வருவது வழக்கம்.
‘கைதி’ படத்தில் நடிகை ரோகிணியின் மாஸான நடன அமைப்பில் உருவான ‘ஆசை அதிகம் வச்சு’ பாடலை பயன்படுத்தியிருந்தார்.
அது போல விக்ரம் படத்திலும் 1995இல் வெளியான அசுரன் படத்தில் வந்த சக்கு சக்கு வத்திகுச்சி பாடல் கமல் நடந்து வரும்போது இந்தப்பாடல் பின்னணியில் குறைவான நேரமே வரும். இப்பாடல் ரசிகர்களிடையே பரவி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
அசுரன் படத்தில் அருண் பாண்டியன், நெப்போலியன், மன்சூர் அலிகான், செந்தில், ராதா ரவி, ரோஜா ஆகியோர் நடித்திருப்பார்கள்.இந்தப் படத்திற்கு ஆதித்யன் இசையமைத்து ஹாரிஸ் ஜெயராஜ் தான் புரோகிராமிங் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் பாடல் மீண்டும் பிரபலமடைந்ததால், அந்தப் பாடலுக்கு சுமார் 27 வருடங்கள் கழித்து அதே எனர்ஜியுடன் மன்சூர் அலிகான் நடனமாடியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அனிருத்க்கு பிரேக்கப் ஆக என்ன காரணம் தெரியுமா? அது தான் பிரச்சனையா!
`சக்கு சக்கு வத்திக்குச்சி' ரீ – க்ரியேஷன் வித் மன்சூர் அலிகான்!#MansoorAliKhan | #Dance pic.twitter.com/YM2xNgZBa3
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 25, 2022
