சித்தார்த் கூறியிருப்பது கேவலமான கருத்து- நடிகை கஸ்தூரி கடும் எதிர்ப்பு

சமீபத்தில் பிரதமர் பஞ்சாப் சென்றபோது அங்கு அவரால் பயணிக்க முடியாமல் போனது. விவசாயிகள் பிரதமர் காரையே மறித்தனர்.

இதனால் பயணத்தை முடித்துக்கொண்டு உடனே டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் சம்பந்தமாக உள்துறை அமைச்சகம் பஞ்சாப் அரசுக்கு எதிராக தன் கண்டனத்தை தெரிவித்தது.

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையா என்பதை உணர்த்துவதை போல இந்த சம்பவம் இருப்பதாக பலரும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நோவலும் கருத்து தெரிவித்துள்ளார் அவரும் பிரதமருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ள நிலையில் அவரின் டுவிட்டர் கருத்தில் ஆபாச கமெண்ட் இட்டதாக சித்தார்த் மீது புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது, சித்தார்த்தின் கேவலமான கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. கடந்த காலங்களில், அவரது அரசியல் கருத்துகளுக்காக அவரையும் அவரது பணியையும் அவமதித்தபோது, ​​​​அவரை முதலில் பாதுகாத்தேன். அவரே தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டது நகைப்புக்குரியது என கஸ்தூரி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment