சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா – அவரை கடவுள் ஆசிர்வதிப்பார் என புகழாரம்

பிரதமர் மோடிக்கு பஞ்சாபில் சில தினங்களுக்கு முன் சரியான பாதுகாப்பு கிடைக்காத நிலையில் அதை எதிர்த்து பிரதமருக்கே நாட்டில் பாதுகாப்பு இல்லையா என பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நோவல் கூறி இருந்தார்.

இந்த கருத்துக்கு எதிர் கருத்து கூறி இருந்த நடிகர் சித்தார்த் சாய்னா நோவலை ஆபாசமாக விமர்சிக்கும்படி ஒரு கருத்தை கூறி இருந்தார்.

இந்த கருத்துக்கு நாடு முழுவதும் மகளிர் அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனங்கள் உருவானது. இந்த நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் நடிகர் சித்தார்த் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் “சித்தார்த் முதலில் என்னைப் பற்றி ஏதோ கூறினார். பின்னர் மன்னிப்பு கோரினார். அவர் சொன்னது எதற்கு வைரலானது என்பது தெரியவில்லை.

அன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனதைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். அவரின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், ஒரு பெண்ணை இதுபோன்று குறிவைத்து தாக்கக் கூடாது. சித்தார்த் உடன் நான் பேசியதில்லை. எனினும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி எனினும் அவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment