Connect with us

தமிழ் ரிலீஸாகும் சாய் பல்லவியின் படம்! ரொம்ப நாள் கழிச்சி வந்த மாஸ் அப்டேட்!

gargi movie release date

பொழுதுபோக்கு

தமிழ் ரிலீஸாகும் சாய் பல்லவியின் படம்! ரொம்ப நாள் கழிச்சி வந்த மாஸ் அப்டேட்!

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர்.இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த டீச்சர் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

இதனை தொடக்கமாக கொண்டு அனைத்து மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது வளர்ச்சியை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுள்ளார்.

sai pallavi

தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில்தான் மிகவும் பிரபலமாகியுள்ளார்,அங்கு அவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தெலுங்கில்தான் பல வித்தியாசமான படங்கள், கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.

2018ல் வந்த ‘தியா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் பின் ‘மாரி 2, என்ஜிகே’ என தமிழில் மொத்தமாக மூன்றே படங்களில்தான் நடித்துள்ளார். அதன்பின் தமிழில் அவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை.

தற்போழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க உள்ளார் சாய் பல்லவி. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் நடிக்க இருக்கிறார். கமல் தயாரிப்பில் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கையுள்ளார்.

sai pallavi in gargi movie first glimpse video 1652086247

இந்நிலையில் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள ‘கார்கி’ படம் தமிழில் வரும் ஜுலை 15ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி.

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top