புஷ்பா 2 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் பல்லவி ! மிஸ் பண்ணிட்டாங்களே !

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர்.படம் முழுக்க முழுக்க காதல் சென்டிமெண்ட் படமாக உருவாகி இருந்தது இந்த படம் 2015ம் ஆண்டு வெளியாகியது மாபெரும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரி, நிவின் பாலி மற்றும் பலர் நடித்து இருந்தனர் .

திறமை மற்றும் அழகு இருப்பவர்கள் ஒரு ஓவர் நைட்டில் கூட பிரபலம் அடைந்து விட முடியும் என்பதற்கு சான்று இப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி. இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த டீச்சர் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. சமீபத்தில் அவர் நடித்த ‘கார்கி’ படம் தமிழில் வரும் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.

Pushpa the rule part 2 1024x576 1 1 1 2 1

இப்பொழுது கூட இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உள்ளதாக ஒரு தகவல்கள் கூறப்படுகின்றன. கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் மலையாள ரசிகர்களை விட, தற்போது அவருக்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வருவதற்கு ரெடியாகியுள்ளது.

முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாகயுள்ளது. தற்போழுது இந்த படத்தில் ஸ்கிரிப்ட் பணி நடைபெற்று வருகிறது.

மகனுடன் நெருக்கமாக இருக்கும் காஜல் அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படம் ! பாக்கவே அவ்ளோ கியூட்!

maxresdefault 16 2

சமீபத்தில் புஷ்பா 2 இல் அல்லு அர்ஜுனுடன் தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடிக்கயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.படத்தில் பழங்குடியின பெண்ணாக நடிக்க நடிகையை அணுகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அந்த தகவல் உண்மையா என புஷ்பா பட தயாரிப்பாளாரிடம் விசாரித்த போது அந்த தகவல் முற்றிலும் உண்மை இல்லை என அவர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்க பட்டுள்ளது இதன் மூலமாக சாய் பல்லவி பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment