நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர்.இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த டீச்சர் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.
2018ல் வந்த ‘தியா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் பின் ‘மாரி 2, என்ஜிகே’ என தமிழில் மொத்தமாக மூன்றே படங்களில்தான் நடித்துள்ளார். அதன்பின் தமிழில் அவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை.
தற்போழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க உள்ளார் சாய் பல்லவி. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் நடிக்க இருக்கிறார். கமல் தயாரிப்பில் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கையுள்ளார்.
இந்நிலையில் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள ‘கார்கி’ படம் தமிழில் வரும் ஜுலை 15ம் தேதி வெளியாகியது. இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்யுடன் நடிக்க அனைத்து கதாநாயகிகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி ஷெட்டி, ராஷி கன்னா ஆகியோர் தனது பேட்டிகளில் தெரிவித்து இருந்தனர்.
இதில் ராஷ்மிகாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு அமைந்துவிட்டது. ‘வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் சாய் பல்லவி விஜய் ஜோடியாக நடிக்க தனக்கும் ஆசை இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “விஜய்யுடன் நடிக்க எனக்கும் ஆசை இருக்கிறது. நல்ல கதை அமைய வேண்டும். நிச்சயம் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது” ” என தெரிவித்துள்ளார்.