Connect with us

மீண்டும் டீச்சராக சாய் பல்லவி: இது வேற லெவலா இருக்கே!!

Copy of feature image 92 16571978153x2 1

பொழுதுபோக்கு

மீண்டும் டீச்சராக சாய் பல்லவி: இது வேற லெவலா இருக்கே!!

மலர் கதாபாத்திரத்தில் மலையாள மொழியில் பிரேமம் படத்தில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சாய்பல்லவி தற்போது கார்கி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடனம் மற்றும் நடிப்பில் சிறந்து விளங்கும் சாய் பல்லவி மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது.

இந்த படத்தில் அநீதிக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார்போல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக பிரச்சனைகளை பேசி பல விமர்சனங்களையும் சந்தித்தார்.

இதனிடையே தற்போது கார்கி படத்தில் டீச்சராக பணிபுரியும் நாயகியின் தந்தை வாட்ச்மேனாக உள்ளார். இவரை போலீசார் காரணம் ஏதும் சொல்லாமல் கைது செய்து கொண்டு செல்கின்றனர்.

இதனால் சாய்பல்லவியை சமூகமும் ஊடகங்களும் மிகவும் மோசமாக நடத்துகிறது. இருந்தும் தளராத கார்கி தந்தைக்காக போராடும் காட்சிகளாக ட்ரைலர் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top