முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; கவனமாக இயக்கப்படுகிறது!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பற்றி கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரவி வருவதாக தமிழக அரசு சில தினங்கள் முன்பாக உச்சநீதிமன்றத்தில் கூறியது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை தற்போது பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.துரைமுருகன்

அதன்படி நீர்வளத்துறை அமைச்சர் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டார். மத்திய நீர்வள குழுமம் ஒப்புதல் தந்துள்ள நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படியே அணை கவனமாக இயக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை கவனமாக இயக்கப்படுகிறது இதற்குப் புறம்பாக வரும் தகவல்கள் உண்மையானவை அல்ல என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணை நிலையான வழிகாட்டுதலின்படி முறையாக இயக்கப்படுகிறது என்றும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மாத வாரியான நீர்மட்ட அட்டவணைப்படி தமிழ்நாடு அரசின் நீர்வளஆதாரத்துறை அணையை கவனமாக இயக்கி வருகிறது என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு நிலையில் துரைமுருகன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய நீர்வள குழுமம் ஒப்புதலின்படி நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான நேர அட்டவணையை பின்பற்றியே முல்லைப் பெரியாறு அணை செயல்படுகிறது என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment