இங்கிலாந்து அணியில் சோகம்…! இனி ஜோ ரூட் இல்லன்னா டீம் எப்படி?

நம் இந்திய கிரிக்கெட் அணியில் கோலி என்றால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அனைவரும் கூறுவது ஜோ ரூட் தான். இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடும் திறன் கொண்டவர்.

இந்நிலையில் இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக வலம் வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது மேற்கத்திய தீவுகளுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது.

இதனால் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதன்படி இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ஜோ ரூட்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அறிவித்துள்ளார். மேற்கத்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இழந்த நிலையில் ஜோ ரூட் பதவி விலகினார். 66 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்காக 27 வெற்றிகளை பெற்றுத் தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.