இது என்னடா குக் வித் கோமாளிக்கு வந்த சோதனை!!! இந்த வாரமும் வட போச்சா?

c3d9c5647ca5f8f85a22f7849454e65c

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. 

போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். 

அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4, 106 நாட்கள் முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுகிழமை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 12 மணிவரை நடைபெற்றது. எனவே கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சனிக்கிழமை மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. 

இந்நிலையில் இந்த வாரம் அடுத்தடுத்து இரண்டு எபிசோடுகள் வருமா என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்த வாரமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொடக்க விழாவை எடுத்து காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை விழா நடைபெற இருக்கிறது. எனவே இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லை என்று தெரிகிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.