எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் 80களில் இருந்து நீதி சம்பந்தமான படங்களை இயக்கியவர். சட்டம் ஒரு இருட்டறை , நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் மற்றும் சுக்ரன் வரை அனல் பறக்கும் படங்களை இயக்கியவர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இவர் அரசியல் வாதியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் கருத்து கூறியுள்ள இவர், காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை பார்க்க முடியவில்லை என்றும், முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலராலும் ஏற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்
மேலும் மாநாடு படத்தில் வரும் மத அரசியல் காட்சிகள் இந்தியாவையும், வாரிசு அரசியல் காட்சிகள் தமிழ் நாட்டையும் குறிப்பிடுவதாக கூறியுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.