திக்கு வாயால் திணறும் சந்தானம் சாதிப்பாரா? சபாபதி ட்ரெய்லர்!

காமெடி நட்சத்திரமாக களமிறங்கி தற்போது கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டு வருகிறவர் நடிகர் சந்தானம். சந்தானம் பேசும் பஞ்ச் டயலாக் அனைவரும் முகத்தில் புன்சிரிப்பு உண்டாகும். இந்த நிலையில் இவர் சமீபகாலமாக ஹீரோவாக நடித்து வருகிறார்.

சபாபதி

இவர் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு டிக்கிலோனா என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இருப்பினும் டிக்கிலோனா படத்தில் வரும் காமெடிகள் அனைத்தும் மக்களுக்கு சிரிப்பை அளித்தது.

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தை கலக்குகிறது.

அந்த படி இந்த திரைப்படத்தினை ஆர்கே என்டர்தய்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் பிரீட்டி வருமா ,யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் திக்குவாய் ஆக நடித்துள்ளார் என்பது டிரைலரை பார்த்த போது தெரிய வந்துள்ளது.

இந்த சபாபதி திரைப்படத்திற்கு சாம் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சபாபதி திரைப்படத்தினை சீனிவாசராவ் இயக்கியுள்ளார்.

தற்போது இப்படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியானது சந்தான ரசிகர் மத்தியில் மிகுந்த சந்தோசத்தை உருவாக்கியுள்ளது.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/fLxDyvSx1J8″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment