சபரிமலை கோவில் சென்ற பிந்து மீண்டும் தாக்கப்பட்டார்

சபரிமலை கோவில் மிகவும் விசேஷமான கோவில். இந்த கோவிலில் உள்ள ஐயப்பன் பிரசித்தி பெற்றவர். 50 வயதுக்கு மேல் உள்ள தீட்டு எனப்படும் மாதவிலக்கு முடிந்த பெண்கள் மட்டுமே ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது காலம் காலமாக உள்ள நடைமுறை.

இந்த நடைமுறையை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அனைத்து வயது பெண்களும் கோவில் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை காரணமாக வைத்து சில பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் முக்கியமாக பிந்து அம்மினி என்பவரும் ஒருவர். இவர் சபரிமலைக்கு செல்கிறேன் என தடையை மீறி செல்லும் போது பல முறை ஹிந்து அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கோழிக்கோடு சென்ற அவரை ஒருவர்  கீழே பிடித்து தள்ளி சரமாரியாக அடித்தார். கோழிக்கோடு கடற்கரை சென்ற அவரை ஒருவர் இப்படி அடித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தன்னை தாக்க வரக்கூடும் என முன்பே அவர் போலிசில் சொன்னதாகவும் போலீஸ் அவரின் புகாரை கண்டுகொள்ளவில்லை என பிந்து அம்மினி புகார் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment