பாவங்கள் போக்கும் புண்ணியம் நிறைந்த பம்பா நதி வரலாறு

சபரிமலையின் அடிவாரம் பம்பை. இங்குள்ள பம்பை நதியில்  குளித்துவிட்டு பலரும் ஐயப்பன் கோவில் செல்ல மலை ஏறுவார்கள். மிக சில்லென ஓடும் இந்த நதியில் குளிப்பதே பெரும் சுகம்தான்.

இந்த இடத்தில் ஒரு காலத்தில் பல முனிவர்கள் தவம் இருந்துள்ளனர்.கேரளாவின் மிகப்பெரிய மூன்றாவது  நதி பம்பா . மருத்துவ குணம் கொண்ட  மூலிகைகள், மற்றும் வன விலங்குகள் கொண்ட, அடர்ந்த காட்டுக்கு மத்தியில் பம்பா நதி தவழ்ந்து வருகிறது . மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப்பகுதியில் உற்பத்தியாகும் இந்த நதி, ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது.

இந்த நதியை உருவாக்கியவர்கள் ராமர் மற்றும் லட்சுமணர் என சொல்லப்படுகிறது.

ஒரு முறை இந்த பகுதிக்கு வருகை புரிந்த ராமர் மற்றும் லட்சுமணர் மதங்க முனிவர் ஆசிரமத்துக்கு வருகை புரிந்தனர்.அங்கு இருந்த பணிப்பெண் நீலி, மதங்க முனிவர் தீர்த்த யாத்திரை சென்றுள்ளதாகவும் வந்திருப்பது ராமர் லட்சுமணர் என்று தெரிந்து கொண்டு அவர்கள் இருவரையும் வணங்கி, வரவேற்று உபசரித்தாள். அவளது வரவேற்பைக் கண்டு மகிழ்ந்த ராமலட்சுமணர்கள் அவளை வாழ்த்தினார்கள்.

தான் மலைவாழ் இனத்தை சேர்ந்த பெண் என்றும் மலைவாழ் இனத்தை சேர்ந்தவள் என்றும் அதனால் ராமர் லட்சுமணருக்கு உணவிட தயக்கம் இருப்பதாக கூறினாள்.

ராம லட்சுமணர்கள் புறப்பட்டபோது, தான் வாழ்ந்தது போதும் என்றும், இனி பிறப்பெடுக்காத நிலையைத் தான் பெற வேண்டும் என்று நீலி அவர்களிடம் வேண்டினாள்.  அவளுடைய அன்பை  உணர்ந்த ராமபிரான் அவளது மனக்குறையை அகற்றி, அனைவரும் அவளைப் போற்றும் வகையில் அவளைப் பெருமைப்படுத்த விரும்பினார். தனக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என்று வேண்டிய நீலியிடம் ‘அன்பால் உயர்ந்த உன்னை இந்த உலகமே புகழும் நிலை வரும். இந்தப் பகுதிக்கு வரும் எவரும் உன்னைப் போற்றுவர் என்று சொல்லி, நீலியைப் பொங்கிப்பெருகிய நீரூற்றாக மாற்றினார்.

அந்த நீரூற்று அருவியாக மாறி மலை உச்சியிலிருந்து நதியாக ஓட தொடங்கினாள். அந்த நதிகரையிலேயே ராமபிரான் தனது தந்தை தசரத சக்கரவர்த்திக்கு செய்ய வேண்டிய கர்மகாரியங்களை செய்தார். அதனால் அந்த நதி புகழ்பெற்றது.

இப்படியாக சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே ஓடும் புகழ்பெற்ற நதியாக பம்பா இருக்கிறது. இங்கு வரும் அய்யப்ப பக்தர்கள் பம்பையில் நீராடாமல் சபரி மலை ஏற மாட்டார்கள்.

பம்பை நதியில் குளித்து ஐயப்பனை வழிபட்டால் நம் பல நூறு ஜென்ம பாவங்கள் போய்விடும் என்பது ஐதீகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.