சாணிப்பவுடர் சாப்பிட்டு கொரொனா பயத்தால் மதுரையில் இருவர் உயிரிழந்த சம்பவம்- சாணிப்பவுடர் தடை செய்யப்படும் உயிரை மாய்த்துக்கொள்வது தேவையற்ற பயம்

மதுரை அருகேயுள்ள சிலைமானில் நாகராஜன் என்பவரின் மகள் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆஸ்பத்திரிக்கு செல்ல பயந்து கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கு தனது மூன்று வயது குழந்தைக்கும் சாணிப்பவுடரை உணவில் கலந்து கொடுத்தார் இதனால் அந்த பெண்ணும் அவரது 3 வயது மகனும் உயிரிழந்தனர்.

மேலும் அந்த பெண் தனது சகோதரன்  அம்மாவுக்கும் சாணிப்பவுடரை கலந்து கொடுத்ததால அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கொரோனா பயம் தேவையற்றது அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதை விட்டு தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக்கொள்வது தேவையற்றது.

இது தேவையற்ற பயம் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் சாணிப்பவுடர் விற்க கூடாது என நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே அரசை வலியுறுத்தியுள்ளோம்  அந்தக்காலத்தில் உண்மையான சாணி மங்களகரகமாக இருக்க வேண்டும் என பயன்படுத்தப்பட்டது தற்போது அதில் கெமிக்கல் கலந்து விற்கின்றனர்.

இப்படி விஷம் கலந்த சாணிப்பவுடர் விற்பனை விரைவில் தடை செய்யப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment