Sports
கொரோனா டெஸ்ட் எடுத்தபோது சச்சின் செய்த சேட்டை: வைரல் வீடியோ!
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொள்ளும் சாலை பாதுகாப்பு டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது
முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசம் அணியுடன் மோதி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் ஷேவாக் அதிரடியாக விளையாடினார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது அடுத்த போட்டி இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் சச்சினிடம் கொரோனா மாதிரிகளை எடுக்கும் போது அவர் திடீரென மூக்கில் காயம் அடைந்தது போல கத்தினார்
இதனையடுத்து அவருக்கு டெஸ்ட் எடுத்த பயந்து விட்டார். ஆனால் உடனே சிரித்து கொண்டார். இதனை அடுத்து சச்சின் விளையாட்டுக்காக அவரிடம் சேட்டை செய்தது தெரியவந்தது. இது குறித்த வீடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
