முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் தந்தை பாராட்டு!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தளபதி விஜய்யின் தந்தை பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நல்லாட்சி அளித்து வருகிறார் என்று அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக திரையுலகினர் தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்: அவர் கூறியிருப்பதாவது:

கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் செயல்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இருப்பார் என்றும் அம்மா உணவகத்தில் பெயரை மாற்ற வேண்டாம் என சொன்னார் இந்த மாதிரி பெருமை எல்லாம் நான் இதுவரை அரசியலில் பார்த்ததில்லை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment