முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு இருந்த ஆதரவாளர்களை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இன்றைய தினம் அதிமுக வட்டாரங்களில் முக்கிய தினமாகவே பார்க்கப்பட்டுகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாதாரண விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றுவதற்கு சுமார் 500 கோடி ஊழல் நடந்து இருப்பதாக லஞ்சம் ஒழிப்பு துறையினருக்கு புகார் எழுந்தது. இதன் காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு துறையின சோதனை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சோதனைகளுக்கு எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் போலீசார் தொண்டர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.