டெண்டர் முறைகேடு! எஸ்.பி.வேலுமணி வழக்கு ஒத்துவைப்பு!

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடு நடந்து இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நவ.12ல் அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!

இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பி.வேலுமணி புகார் என்பது அரசியல் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதாக வாதிட்டார்.

அதே சமயம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறைந்த விலையில் டெண்டர் விடப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

ப்ளீஸ் டாஸ்மாக் கடையை மூடுங்க.. காலில் விழுந்த பாமக எம்எல்ஏ!!

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment