சையது முஷ்டாக் அலி டி20: மகாராஷ்டிரா கேப்டன் ருத்ராஜ்! சிஎஸ்கே சப்போர்ட் யாருக்கு?

சில நாட்களுக்கு முன்புதான் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவு பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நான்காவது முறையாக வெற்றி கோப்பையை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஓபனிங் பேட்ஸ்மேன் ருத்ராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரின் அதிக ரன்களை குவித்தார்.ருத்ராஜ் கெய்க்வாட்

அதனால் அவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே ஓபனிங் பேட்ஸ்மேன் ருத்ராஜ் கெய்க்வாட் தற்போது மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்று மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த சையது முஷ்டாக் அலி தொடர் நவம்பர் மாதம் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் ஆட்டத்திலேயே தமிழகத்தை எதிர்கொள்கிறது மகாராஷ்ட்ரா.

தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பை தமிழ்நாடு வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிஎஸ்ஐ ரசிகர்கள் தமிழ்நாட்டிற்கு சப்போர்ட் பண்ணுவதா? அல்லது ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு சப்போர்ட் பண்ணுவதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment