
செய்திகள்
பக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா!!
கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக பல்வேறு நாடுகளும் ரஷ்யா பொருளாதர தடை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பல்வேறு நாடுகளில் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் முன்னேச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர். அந்த வகையில் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புக்கு காரணமானவர்கள் குறிப்பாக புடினின் ஆட்சிகாலத்தில் இருக்கும் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்வதாக கனடா அதிபர் கூறியுள்ளார்.
குறிப்பாக கனடா உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகள் விதிக்கப்பட்டதாகவும், ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில் அந்நாடு திண்டாடி வருவதாக கூறினார். இதனால் உக்ரைன் நாட்டிற்கு கனடா நாடு ஆயுதங்களை அனுப்பி வருவதாக கூறினார்.
இந்த சூழலில் ரஷ்ய அதிபர், அவரது அரசாங்கம் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 1,000 உறுப்பினர்கள் கனடா நாட்டிற்குள் வருவதை தடைவிதிப்பதாக அந்நாட்டு அதிபர் செவ்வாயன்று செனட்டில் தெரிவித்துள்ளார்.
