ரஷ்ய அதிபர் விளாடிநமிர் புட்டினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய உளவுத் துறை முன்னாள் அதிகாரி ஒருவரின் சமூக தள தகவல்களை சுட்டிக்காட்டி அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் இதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் புட்டின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் விரைவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவர்கள் கூறி இருப்பதாக அந்த இதழ் கூறியுள்ளது.
புட்டின் உடல்நலத்தில் பாதிக்கப்பட்டு இருப்பது அவரது தோற்றத்தில் தெரிய வருவதாகவும் அந்த செய்தி கூறிப்பிட்டுள்ளது. புற்றுநோய் தவிர மற்ற நோய்களிலும் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது தனது பதவியை நம்பிக்கைகுரிய நபர் மற்றும் பாதுகாப்பிற்குரிய நபரான நிகோலா பட்ரூ ஷேவிடம் பொறுப்பை ஒப்படைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.