உக்ரைனில் உருக்குலைந்து கிடைக்கும் ரஷ்ய ராணுவ வாகனங்கள்….;

உக்ரைன் நாட்டை நினைத்தபடி சுலபமாக வென்று விடலாம் என்று பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா போர் அறிவித்தது. ஆனால் நிலைமை அவ்வாறு காணப்படவில்லை. தற்போது வரை உக்ரைன் எதிர்த்து போரிட்டு வருகிறது.

இதனால் ரஷ்ய ராணுவத்தினரால் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். இந்தநிலையில் ரஷ்யாவுக்கு பெரும் இழப்பு நிகழ்ந்துள்ளதாக உக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. அதன்படி ரஷ்ய ராணுவத்தின் பல்வேறு வகைகளை சேர்ந்த 1457 வாகனங்களை அழித்துள்ளதாக உக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

தொண்ணூத்தி ஆறு விமானங்கள், 118 ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி உள்ளதாக உக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் பல்வேறு நகரங்களில் உருக்குலைந்து கிடக்கும் ரஷ்ய ராணுவ வாகனங்களில் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஊடுருவிய ரஷ்யாவுக்கு எதிரான கடும் எதிர்ப்புக்கு சான்றாக விளங்குவதாக உக்ரேன் அறிவித்துள்ளது. இதனால் தற்போது வரை ரஷ்ய ராணுவத்தினரால் உக்ரைன் நாட்டில் முன்னேற முடியாத சூழ்நிலை தான் காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment