Connect with us

உக்ரைனில் இருந்து வெளியேறும் ரஷ்ய படைகள்! ஆனால் எல்லாரும் போவார்களா என்பது சந்தேகம்தான்!!

russia hold drill amid ukraine tension 770x433 1

News

உக்ரைனில் இருந்து வெளியேறும் ரஷ்ய படைகள்! ஆனால் எல்லாரும் போவார்களா என்பது சந்தேகம்தான்!!

உக்ரைனில் இருந்து வெளியேறும் ரஷ்ய படைகள்! ஆனால் எல்லாரும் போவார்களா என்பது சந்தேகம்தான்!!

கடந்த மாதம் 24ம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் புரிய ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டிருந்தார். அதன் எதிரொலியாக இன்றுவரையும் உக்ரைன் நாட்டில் அதிதீவிரமாக ரஷ்ய படைகள் போர் புரிந்து வந்தனர்.

இதனால் உக்ரைன்  நாட்டில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்தனர். குறிப்பாக போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு உக்ரைன் மக்கள் தஞ்சம் அடைந்தனர்.

நேற்றைய தினம் கூட ஜெர்மனி நாட்டுக்கு உக்ரைன் மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்ததாக காணப்படுகின்றது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம் குறித்து அண்டை நாடுகளில் வெளியுறவு துறை அமைச்சர்கள் சந்தித்து பேசிக் கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக இன்று உக்ரைன் நாட்டிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கியுள்ளது. உக்ரேனின் செர்னோபில் அணு மின் நிலையத்திலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேற தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கினாலும் அனைத்து வீரர்களும் வெளியேறுவது என்பது கூற முடியாது என்றும் அமெரிக்கா கூறியது. துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனில் படைகளை குறைக்க சம்மதித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top