ரஷ்யா புரிவது போர் அல்ல; பயங்கரவாதம்! 400 பேர் தங்கியிருந்த பள்ளி மீது தாக்குதல்!!

கடந்த 25 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் புரிந்து கொண்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா உக்ரேன் மீது போரை அறிவித்தது. அதனால் உக்ரைன் நாட்டிலுள்ள பல நகரங்கள் சூறையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வீடியோ மூலமாக வெளியிட்டு வருகிறார். அந்த படி தற்போது ரஷ்யா மேற்கொள்வது போர் அல்ல பயங்கரவாதம் என்று கூறியுள்ளார்.

ரஷ்யா தற்போது செய்து வருவது போர் அல்ல பயங்கரவாதம் என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார். ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்ப்பு கிடைக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.. உக்ரைனில் 400 பேர் தங்கியிருந்த பள்ளி மீது தாக்குதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மரியுபோல் நகரிலிருந்த ஓவிய பள்ளி மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகளை தாக்கி உள்ளது. பாதுகாப்புக்காக 400க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்த பள்ளி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதால் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment