ரஷ்யா – உக்ரைன் இருநாடுகளிக்கிடையே போர் நடைபெற்றால் அனைத்து விலைகளும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வந்தனர்.
இந்நிலையில் இருநாடுகளிக்கிடையே போர் நடைபெற்று வருவதால் பாமாயில், கடலை எண்ணெய், சூரியகாந்து எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் 15 கிலோ எடை கொண்ட சூரியகாந்தி எண்ணெய் டின் உக்ரைன் போருக்கு முன்பு 2,150 க்கு விற்பனையான நிலையில் ரூ 2,525 க்கு விற்பனையாகிறது. லிட்டரில் ரூ.130க்கு விற்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் தற்போது தற்பொழுது ரூ.160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடலை எண்ணையும் முன்பு ரூ 2,400 விற்பனையான நிலையில் தற்போது ரூ.2,600 க்கு விற்பனைக்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.115 க்கு விற்பனையான நிலையில் தற்பொழுது ரூ.145 க்கு விற்கபடுகிறது.
மேலும், இந்த போரை முடிவுக்கு கொண்டுவந்தால் மட்டுமே இதன் விலையினை குறைக்க முடியும் என்றும் இல்லையெனில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.