முடிவுக்கு வருமா ரஷ்யா – உக்ரைன் போர்: பெலாரஸில் தொடங்கியது 2-ம் கட்ட பேச்சுவார்த்தை !!
ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே 8- வது நாட்களாக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்நிலையில் மேலும் போர் உ க்கிரமடைந்தால் பெரும் பொருளாதர சேதங்கள் ஏற்படும் என பல உலக நாடுகள் எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பெய்தும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்ப்பட்டுள்ளன.
இதனை தடுக்க ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே 1-ம் கட்ட பேச்சுவார்த்தை பெலாரசில் நடைபெற்றது. ஆனால் இது தோல்வியடைந்தது.
இதனிடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை பெலாரசில் தொடங்கி இருப்பதாகவும் இருநாட்டு தரப்பும் சில முக்கிய விவகாரங்களில் இறங்கி வர வாய்ப்புள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது நிலவி வரும் சூழலுக்கு இந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்கின்றனர்.
