Connect with us

ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரம்: கனடா திடீர் முடிவு !!

russia hold drill amid ukraine tension 770x433 1

News

ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரம்: கனடா திடீர் முடிவு !!

ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரம்: கனடா திடீர் முடிவு !!

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.

ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது குண்டு மழை பெய்தது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக மடிவது மட்டுமில்லாமல் பல லட்சம் பொதுமக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர்,

இந்நிலையில் உக்ரைன் அகதிகளுக்கு ஆதரவாக கனடா ராணுவ வீரர்களை போலந்துக்கு அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கை சமாளிக்கவும், அவர்களுக்கு ஆதரவு அளிக்க கனட ராணுவ வீரர்கள் போலாந்து நாட்டிற்கு செல்வதாக கனடா பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படை வசதிகளை செய்து கனடாவில் குடியேற்றம் செய்ய ராணுவவீர்கள் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top