அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் ரஷ்யா !! எதற்காக தெரியுமா ?

ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் ஜோபைடர் கடுமையாக விமர்சித்தால் அந்நாட்டின் மீதான தூதரக உறவு முறித்து கொள்ளப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதின் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடர் அண்மையில் கடுமையான வார்தைகளினால் விமர்சனம் செய்தார்.

புதின் போர்குற்றவாளி, கொலைகார சர்வாதிகாரி, மூர்க்கதனம் கொண்டவர் என்று ஜோ பைடர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாது என ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அரசு அமெரிக்க தூதரை நேரில் அழைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளிக்கு இது போன்ற வார்த்தைகள் தகுதியானது அல்ல என தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்யா அமெரிக்கா உறவு விளிம்பு நிலையில் இருப்பதாகவும் இதே நிலை மீண்டும் தொடர்ந்தால் அமெரிக்காவுடனான உறவு முறித்துக்கொள்ளப்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment