உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அடுத்தப்படியாக நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
கடந்த வாரம் உக்ரைனின் மேற்கு எல்லை பகுதியில் உள்ள நேட்டோவின் உறுப்பு நாடான கிரோஷியா அருகே 350 கிலோ மீட்டர் தூரத்தில் பறந்த வட்டமிட்ட டிரோன் இன்று கிரோஷியா எல்லை அருகே விழுந்து நொறுங்கியது.
அந்த ட்ரோனில் வெடி மருந்துகள் இருந்ததாக கிரோஷியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த டிரோன் உக்ரைனைக்கு சொந்தமானதா? அல்லது ரஷ்யவுக்கு சொந்த மானதா ? என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை.
இதனை தொடர்ந்து போலந்து வழியாக மற்றொரு டிரோன் வந்ததாக உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களை ஒப்பிடும்போது உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக நேட்டோ நாடுகளுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதால் ரஷ்ய படைகள் நேட்டோ நாடுகளை தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.