அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இந்திய மதிப்பில் 111 கோடி லட்சம் வர்த்தகத்தை குறைக்க இதற்கு முன்னதாக முயற்ச்சித்தது இல்லை. தற்போது மேற்கத்திய நாடுகளின் இந்த நடவடிக்கை ரஷ்யா மீது எவ்வாறு அழுத்தம் கொடுக்கப்போகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால் ரஷ்யாவின் ஆதரவுடன் உக்ரைன் விவகாரத்தை கவனமாக கையாளும் சீனா இந்த தடைகளால் பயனடையளாம் என சர்வதேச பொருளாதர வல்லுநர்கள் முன்வைக்கிறார்கள். ஏற்கனவே உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்ய அதிபரும், சீன அதிபரும் தங்களின் உறவின் செல்வாக்கை குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலேயே காட்டிவிட்டனர்.
கடந்த 2014- ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்த போதும் குறைவான பொருளாதர தடைகளை சந்தித்தது. அப்போதிலிருந்து சீனா மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்பதை உலக வங்கி மற்றும் ஐனா சபை வர்த்தகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2003 ஆண்டு 16 பில்லியன் ஆக இருந்த ரஷ்யா- சீனா வர்த்தகம் 2021 – ம் ஆண்டில் 146 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்கா – ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் 34 பில்லியம் அதிகம்.
அந்த வகையில் சீனாவிடம் இருந்து ரஷ்யா மொபைல் போன் , கணினி, தொலைதொடர்பு சாதனங்கள், பொம்மைகள் , ஜவுளி , ஆடைகள் , எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்கிறது.
ஏற்கனவே ரஷ்யா – சீன வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய தடைகளை சமாளிக்க சீனா உடனான உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் என்றும் ரஷ்யாவை தூண்டும் என்றும் உலக வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் ரஷ்யா ஐரோப்பிய யூனியனுடம் கொண்டிருக்கும் வர்த்தகத்தை சீனா சமன் செய்யுமா என வல்லுநர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய பட்ஜெட்டில் 40% வருவாய் இழப்பீட்டை சரிக்கட்ட சீனாவை சரியான இடமாக ரஷ்யா பார்த்தால் அது ரஷ்யாவிற்கு மிக அதிக செலவு ஏற்ப்படுத்தும் என தெரிவிக்கின்றனர்.