Connect with us

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம்: இந்தியா வாக்கெடுப்பை புறக்கணிப்பு!!

india russia flag

செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம்: இந்தியா வாக்கெடுப்பை புறக்கணிப்பு!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம்: இந்தியா வாக்கெடுப்பை புறக்கணிப்பு!!

உக்ரைன் -ரஷ்யா விவகாரத்தில் பல நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டு வருகின்றனர். அதேவேளையில் ஆதரவாக அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா நடுநிலைத்தன்மையில் தான் காணப்படுகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏனென்றால் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா இருக்கக் கூடாது என்றும் கூறியது.

ஆனால் இந்தியாவோ அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது.

அதன்படி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்தியா உட்பட மொத்தம் 13 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து உள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன்  விவகாரம் தொடர்பாக ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா மட்டுமே வாக்களித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மக்கள் நிலை தொடர்பாக அரசு கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top