போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு தயார்.. ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

உக்ரைன் மீது நடத்தி வரும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது என்பதும் கடந்த 10 மாதங்களாக நடந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ரஷ்ய அதிபர் புதினை சமீபத்தில் சந்தித்த இந்திய பிரதமர் மோடி, உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

Modi Putinஇந்த நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த தயார் என்றும் புகார் தொடர்பாக அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் ஆனால் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பிளவுபடுத்த நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.