உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷ்யா மகிழ்ச்சி….!

இன்று காலை முதல் உலகமெங்கும் பெரும் போர் கலவரமே நிலவிக் கொண்டு வருகிறது. ஏனென்றால் யாரும் எதிர்பாராத விதமாக ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் புரிந்து வருகிறது. அதுவும் குறிப்பாக உக்ரைன் நாட்டில் உள்ள விமான தளங்களை முழுவதுமாக முறியடித்து விட்டதாக ரஷ்யாஅறிவித்திருந்தது.

இந்த நிலையில் ரஷ்யாவுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதோடு மட்டுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா கடும் எச்சரிக்கையை விடுத்திருந்தது. இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷ்யா மகிழ்ச்சியளிப்பதாக கூறியது.

அதன்படி இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கலந்துகொண்டது. அதில் பேசிய போது போர் பதற்றத்தை தடுக்க ஒவ்வொரு நாடுகளும் தூதரகம் மூலமாக முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

இத்தகைய இந்தியாவின் கருத்துக்கு ரஷ்ய தூதர் ரோமன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடு நடுநிலையை கையாளுவதாக தெரிகிறது என்றும் ரஷ்யா வரவேற்பு அளித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தால் இந்தியாவுடனான நட்பு பாதிக்கப்படாது என்றும் ரஷ்ய தூதர் ரோமன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment