Connect with us

ரஷ்யா-இந்தியா நட்பு! அதிருப்தியில் அமெரிக்கா; இன்று வாஷிங்டனில் வாதம்!!

india russia flag

செய்திகள்

ரஷ்யா-இந்தியா நட்பு! அதிருப்தியில் அமெரிக்கா; இன்று வாஷிங்டனில் வாதம்!!

ரஷ்யா-இந்தியா நட்பு! அதிருப்தியில் அமெரிக்கா; இன்று வாஷிங்டனில் வாதம்!!

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக காணப்படுகிறது. இதனால் பல நாடுகள் ஆச்சரியம் அடைந்தன. ரஷ்யாவிடமிருந்து இந்திய ஆகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்க உள்ளதாக முடிவெடுத்துள்ளது.

இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா-இந்தியா நட்பு விவகாரத்தில் அமெரிக்கா அதிர்ச்சியில் உள்ளது. இவ்வாறுள்ள நிலையில் இன்று இந்தியா அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை பற்றி இன்று வாஷிங்டனில் ஆலோசனை நடைபெறுகிறது.

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதில் அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியா விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருந்தது .

போர் விவகாரத்தில் இந்தியா எதிர்க்காமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளதாக கூறியது. ரஷ்யாவிடமிருந்து  பெரும் ஆயுதங்களை விட இதர நாடுகளின் ஆயுதங்களுக்கான விலை அதிகம் என்று இந்தியா கூறியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் ஜெய்சங்கர் ஆகியோர் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் பயணம் செய்துள்ளனர். வாஷிங்டனில் ஏப்ரல் 11ம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்த விவாதம் விவகாரம் விவாதிக்கப்பட உள்ளது.

இப்பிரச்சனை அமெரிக்காவுடனான உறவுகளுக்கு ஒரு தடைக்கல்லாக  இருக்காது என்று இந்திய வெளியுறவு கூறியுள்ளது. ரஷ்யா முக்கியமான கூட்டாளி, நாட்டின் நலன் கருதி எது முக்கியமோ அதை செய்து வருகிறோம் என்றும் இல்லை உரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top